05.07.2017
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஜூலை 12 முதல் 28 வரை நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உதவி உபகரண அளவீட்டு முகாம் ஜூலை 12ல் துவங்கி 28 வரை நடக்கிறது.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஜூலை 12ல் நடக்கிறது.
13ல் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ல் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி, 18ல் முதுகுளத்துாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 19ல் போகலுார் அரசு
மேல்நிலைப்பள்ளி, 20ல் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
ஜூலை 21ல் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 25ல் கமுதி கோட்டைமேடு அரசுமேல்நிலைப்பள்ளி, 26ல் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 27ல் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, 28ல் நயினார்கோயில் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
மாவட்ட மருத்துவ துறை சார்பில் கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், எலும்பு முறிவு மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு அளவெடுக்கும் பணியும் நடக்கிறது.
மேலும் காதுவால் மற்றும் இதர அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை
அளிக்கப்படும்.
உதடு பிளவு போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சையளிக்கப்படும்.
முகாம்களில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
முகாம் ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment