FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, July 5, 2017

அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த குழந்தைகளைக் கொஞ்சிய கலெக்டர்!

03.07.2017, ‘திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சைபெற்றோர், அதிநவீன முறையில் கருவிழிமாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பயனாளிகள் மற்றும் வாய்பேச முடியாத காது கேளாதோர், "காக்ளியர் இம்பிளாண்ட்" சிகிச்சைபெற்ற குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி சந்தித்தார்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.அனிதா, கண் சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர். பார்த்திபன் புருஷோத்தமன், இணைப் பேராசிரியர் டாக்டர். விஜய சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், வெற்றிகரமாக சிகிச்சைகளை எடுத்துப் பயனடைந்த குழந்தைகளிடம் ஆட்சியர் ராசாமணி நலம் விசாரித்தார். “வருங்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்.?" என அந்தக்குழந்தைகளிடம் ஆட்சியர் கேட்க, ஒரு குழந்தை, 'நான் டாக்டராகணும்' என்று சட்டெனச் சொல்லவே, அந்த இடமே குதூகலமானது. வாய்பேச முடியாமல் இருந்து, தற்போது சிகிச்சைக்குப்பின் குரல் வந்துள்ள அக்குழந்தையின் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பார்த்திபன், "இந்தியா முழுவதும் ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சதவிகிதம்பேர் கருவிழி நோய் காரணமாக, பார்வை இழப்பு அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையுடன் இணைந்த கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கண் சிகிச்சைத் துறையின் கண் வங்கி உதவியுடன் கருவிழி நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு கருவிழி நவீன மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த கண் வங்கியின் மூலம் திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கருவிழி பாதிப்பால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கு அதிநவீன கருவிழிமாற்று அறுவைசிகிச்சை மூலம் பார்வை பெற்று பயனடைந்து வருகின்றனர். கண்தானம் செய்ய விரும்புவோர் அல்லது இறந்த பின்னர் கண்களை தானம் செய்ய விரும்பும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4251465 மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க அலுவலக எண்: 0431-2770040 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" என்றார்.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான துறைத் தலைவர் டாக்டர் பழனியப்பன், "திருச்சி மாவட்டத்தில் பிறவியிலேயே காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 'காக்ளியர் இம்பிளாண்ட்' ஆபரேஷன் மூலம் காது கேட்கவும், பேச வைக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2016 நவம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த அறுவைசிகிச்சையின் மூலம் மணப்பாறையைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி வர்ஷினி, தொட்டியம் காடுவெட்டியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி புவனேஸ்வரி, மணப்பாறை வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் நவநீதகிருஷ்ணன் ஆகிய மூன்று குழந்தைகள், தற்போது காதுகேட்கும் திறன் பெற்றுள்ளனர். மேலும், பேச்சுப்பயிற்சியின் மூலம் பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.


இந்தச் சிகிச்சைமுறை குறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 37 குழந்தைகளுக்கு 'காக்ளியர் இம்பிளாண்ட்' அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பிறவிக்குறைபாடு நீக்கப்பட்டு, சாதாரண குழந்தைகளாக மாற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன அறுவைசிகிச்சை ஒரு வயது முதல் ஆறு வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செய்யப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஆகும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. அண்மையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட 10 குழந்தைகளுக்கு 'காக்ளியர் இம்பிளாண்ட்' கருவி பொருத்தப்பட்டது" என்றார்.

மருத்துவத்துறையில் சிறந்துவிளங்கும் மூன்று மருத்துவர்களுக்கான விருதுகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கிப் பேசினார்.

“தமிழகத்தில் கடைநிலை மக்களுக்கும் சுகாதார வசதி கிடைக்கும்வகையில் அரசு தீவிர அக்கறை செலுத்தி வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திருச்சியை ஆரோக்கியமான முன்மாதிரி மாவட்டமாக உயர்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

அறுவைசிகிச்சையைத் தொடர்ந்து, பல்வேறு பயிற்சிகளுக்குப் பின் தங்கள் குழந்தைகள் காதுகேட்டுப் பேசுவதைக் கண்ட அவர்களின் பெற்றோர், மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கலெக்டர், மருத்துவமனை டீன் டாக்டர் அனிதா மற்றும் அனைத்து டாக்டர்களுக்கும் குழந்தைகளின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment