11.07.2017, நாமக்கல்: வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி, கலெக்டர் முன், தீக்குளிக்க முயன்றார். நாமக்கல் மாவட்டம், ஏளூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார், 40. பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அவருக்கு, தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பிளஸ் 2 முடித்துள்ள அவருக்கு, இதுவரை வேலை கிடைக்கவில்லை. விரக்தியில் இருந்தவர், பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின், கலெக்டர் ஆசியா மரியம் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு வந்தார். அப்போது, தன் பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் கன்மேன், உடனடியாக பாட்டிலை பறித்துக் கொண்டார். தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உதயகுமாரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Wednesday, July 12, 2017
வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளி கலெக்டர் முன் தீக்குளிக்க முயற்சி
11.07.2017, நாமக்கல்: வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி, கலெக்டர் முன், தீக்குளிக்க முயன்றார். நாமக்கல் மாவட்டம், ஏளூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார், 40. பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அவருக்கு, தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பிளஸ் 2 முடித்துள்ள அவருக்கு, இதுவரை வேலை கிடைக்கவில்லை. விரக்தியில் இருந்தவர், பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின், கலெக்டர் ஆசியா மரியம் வீட்டுக்கு செல்வதற்காக காருக்கு வந்தார். அப்போது, தன் பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் கன்மேன், உடனடியாக பாட்டிலை பறித்துக் கொண்டார். தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உதயகுமாரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment