FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, July 6, 2017

இலவச தையல் மிஷின் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

05.07.2017
சமூக நலத்துறை வழங்கும் இலவச தையல் மெஷின் பெற விரும்பும் பயனாளிகள், வரும், 11ம் தேதிக்குள், விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறை மூலம், சத்தியவாணி முத்து நினைவு இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிடச்சசான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சசான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.--------சிமென்ட், கம்பி வினியோகம்அறிக்கை அளிக்க உத்தரவு -நமது நிருபர் -ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பசுமை வீடுகள், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு உள்ளிட்ட திட்டங்களில், கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. பயனாளிகளுக்கு தேவையான சிமென்ட், கம்பி உள்ளிட்டவை, மானியத்தில் வழங்கப்படுகிறது. பசுமை வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய், ஆவாஸ் யோஜனா தொகுப்பு வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது.பயனாளிகள் உரிய நேரத்தில் கட்டுமான பொருட்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக, வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் மட்டும், சிமென்ட் மற்றும் கம்பிகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பயனாளிகள் வசதிக்காக, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சிமென்ட், கம்பிகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு ஒதுக்கீடு படிவத்துடன் வந்தால், அவர்களுக்கான கம்பி, சிமென்ட் எடுத்துச் செல்லலாம். பயனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் குறித்து, வாராந்திர அறிக்கையை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment