FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, July 14, 2017

சிறையில் கணவர்... வாய் பேச முடியாத, காது கேட்காத கர்ப்பிணி பெண்..! கதிராமங்கலம் சோகம்

14.07.2017
பாசப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி, கறுப்புக்கொடி போராட்டம் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது கதிராமங்கலம். இது ஒருபுறமிருக்க, கடந்த 30-ம் தேதி இங்கு நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறையின்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினர், மனக்குமுறலோடு பாசப்போராட்டத்தில் தவித்துவருகிறார்கள். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர், ஜெயராமன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த விடுதலைச் சுடர், ரமேஷ், சிலம்பரசன், முருகன், வெங்கட்ராமன், தர்மராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், இவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்தில் தவித்துவருகின்றன. இவர்களில், ரமேஷின் குடும்பச் சூழல் மிகவும் பரிதாபமாக உள்ளது. கதிராமங்கலம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தெருவில் வறுமையோடு தோற்றமளிக்கிறது ரமேஷின் சின்னஞ்சிறு ஓட்டு வீடு. கூலித் தொழிலாளியான ரமேஷூக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது. வாய் பேச முடியாத, காது கேட்காத நிறைமாத கர்ப்பிணியான கவிதா, தனது மனக்குமுறலை வார்த்தைகளால் கொட்ட முடியாத நிலையில் கண்ணீரைக் கொட்டித் தீர்க்கிறார். கணவர் ரமேஷ் சிறை சென்றதிலிருந்து சரியாக உணவருந்தாமல், தூக்கமில்லாமல் கவிதாவின் உடல் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக கவலைதெரிவிக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள். ''கவிதாவின் உயிருக்கோ, குழந்தையின் உயிருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும்தான் பொறுப்பாவார்கள். அப்படி ஏதேனும் நடந்தால், ஒட்டுமொத்த கதிராமங்கலமும் கிளர்ந்தெழும்'' என எச்சரிக்கை செய்கிறார்கள்.

சிறையில் வாடும் சிலம்பரசனின் குடும்பம், தற்போது அன்றாட ஜீவனத்துக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்டட கூலித் தொழிலாளியான சிலம்பரசனின் சொற்ப வருமானத்தில்தான் அன்றாட வாழ்க்கை கடந்திருக்கிறது. சிறையிலிருக்கும் மற்றொரு நபரான முருகனை, சிறையில் சென்று சந்திக்க மன தைரியம் இல்லாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல் பெரும் ஆற்றாமையோடு தவித்துவருகிறார் இவரது மனைவி. காரணம், இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையிடம் முருகனுக்கு பாசம் அதிகம். 10 நாள்களுக்கும் மேலாக அப்பாவைப் பார்க்காமல் ஏக்கத்தில் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. கணவரைப் பார்க்க, சிறைச்சாலைக்கு குழந்தையை அழைத்துச் செல்லவும் மனமில்லை. தனியாகப் போய்ப் பார்க்க மனம் இல்லை. இப்படியாக, கண்ணீரோடு கடந்துகொண்டிருக்கிறது, இவர்களின் அன்றாடப் பொழுதுகள்.

No comments:

Post a Comment