09.07.2017, விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில், காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.அய்யூர் அகரத்தில் அமைந்துள்ள நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், இந்த கல்வியாண்டிற்கான கவுன்சில் வார விழா நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரத்தில் உள்ள வேலா காதுகேளாதோர் சிறப்பு பள்ளிக்கு சென்றனர்.அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறைகளை கவனித்ததோடு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், உதவி பொருட்களை, பள்ளி முதல்வர் மேக்சிமஸ் எச்.ரோஸ் தலைமையில் வழங்கினர்.வேலா பள்ளி நிறுவனர் மோகன், தலைமை ஆசிரியர் லதா ஆகியோர், உதவி பொருட்களை பெற்று கொண்டனர். நாகர் பள்ளி செய்தி தொடர்பா ளர் ராமானுஜம், நிர்வாகிகள் ரஜ்ஜீஷ், எழிலரசி, மைதிலி உள்பட ஆசிரியர்கள், கவுன்சில் மாணவர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment