21.07.2017, திருப்பூர் ·: இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க, சமூகநலத்துறை கூடுதல்அவகாசம் வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.சமூகநலத்துறை மூலம், கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. அத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிட சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜாதிச்சான்று, பயிற்சி சான்று தயாராக இருந்தாலும், வருமான சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் சான்று பெற வேண்டும் என்பதால், 5 மற்றும், 6ம் தேதிகளில், ஏழை பெண்கள் வருமானசான்று கேட்டு விண்ணப்பித்தனர். சான்று பெறுவதற்குள், காலஅவகாசம் முடிந்துவிட்டதால், இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க இயலவில்லை. மாவட்ட நிர்வாகம் வழங்கிய குறுகிய அவகாசத்தில், 10 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஏழை, எளிய பெண்களின் எதிர்கால நலன்கருதி, இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment