09.11.2018
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாகத் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை அளிக்க, மெட்ராஸ் இ.என்.டி. ஆராய்ச்சி மையத்திற்கு சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் மோகன் காமேஸ்வரன், செயல் இயக்குநர் இந்திரா காமேஸ்வரன் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று வழங்கினர். சமூக நலத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் இதுவரை சுமார் ரூ.54 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment