FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, November 30, 2018

சைகையை மொழிபெயர்க்கும் நுண்ணறிவு கம்ப்யூட்டர் செயலி


சென்னை, நவ. 28–
சைகையை மொழி பெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் செயலியை நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் தாங்கள் கூற விரும்புவதை சைகை மூலம் தெரிவிப்பார்கள். ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் மைக்கெல் டி லேபி என்பவர் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் சைகையில் கூறும் விஷயத்தை புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியை உருவாக்கினார்.

இந்நிலையில் செவித்திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு உள்ளவர்களின் சைகையை மொழிபெயர்க்கும் வகையில் “கூகுள் ட்ரான்ஸ்லாட்டர் ஃபார் தி டெஃப் அண்ட் ம்யூட்” என்னும் செயற்கை நுண்ணறிவை நெதர்லாந்தை சேர்ந்த எவால்க் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

இந்த செயலியை பயன்படுத்தி தங்களின் ஸ்மார்ட்போன் முன்பு சைகையில் பேசினால் அதை வாக்கியமாகவும், பேச்சாகவும் இந்த செயலி மாற்றிவிடும். இந்த செயலியை ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்.

தேசிய காது கேளாதோர் சங்கத்தின் தகவல் படி, இந்தியாவில் 1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கடினமாகவே இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்களின் சேவை

இதுகுறித்து எவால்க் துணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான கோன்ஸ்டாண்டின் பாண்டார் கூறியதாவது:–

செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் சேவை பெரும் தேவையாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் மொழிப்பெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிகமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களிடம் உரையாடுவது என்பது சவாலான விஷயமாக உள்ளது. அவர்களிடம் பென் பேப்பர் மூலம் எழுத்து வடிவில் உரையாடுவது மோசமான யோசனை. இந்த செயல் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நேரம் வீணாகும்.

விலை குறைவு

அதேபோல் சந்தைகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்பு சாதனங்கள் விலை அதிகமாகவும் செயல் திறன் குறைவாகவும் உள்ளன. இல்லையென்றால், பழைய தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளன.

அதை ஒப்பிடும்போது நாங்கள் வடிவமைத்துள்ள செயலி வேகமாகவும், எளிதாகவும், வசதியாகவும், பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும் இருக்கும். மிக வேகமாக சைகையை மொழி பெயர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செயலி இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எவால்க் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோமன் வைஹோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment