28.11.2018, ஈரோடு: மாற்றுத்திறனாளிகளை, திருமணம் செய்து கொள்வோருக்கு, திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது.
முற்றிலும் பார்வையற்றோரை, திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளோர், கை, கால் பாதித்த மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ளோர், காது கேளாத, வாய் பேசாத நபரை திருமணம் செய்து கொள்ளும், நல்ல நிலையில் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதிகளில் ஒருவர், பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால், 50 ஆயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்கம் கிடைக்கும். வருமான வரம்பில்லை. மணப்பெண், 18 வயதுக்கு மேலிருக்க வேண்டும். மேலும் விபரமறிய, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். www.scd.tn.gov.in இணைய தள முகவரியிலும் பார்க்கலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment