தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும் என்று சிறுமலர் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:
உங்களுக்கு நம்பிக்கையூட்டிய பாடலான நான் சினிமாவில் பாடிய ‘உன்னால் முடியும் தம்பி’ பாடலை இங்கு நடந்த நிகழ்ச்சியில் குழந்தை கள் பாடியதை கேட்கும்போது இன்று எனக்கே நம்பிக்கை வரு கிறது. இந்த குழந்தைகளின் தன்னம் பிக்கை, விடாமுயற்சி ஒருவகை யில் எனக்கு பாடமாக இருந்தது.
பள்ளியின் மாணவன்
நானும் ஒருவகையில் இந்த பள்ளியின் மாணவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இந்த குழந்தை களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந் தால் இந்தியாவே பல மடங்கு முன்னேறி விடும்.
37 ஆண்டுகளுக்கு முன்பு
இதே பள்ளியில் 37 ஆண்டு களுக்கு முன்பு ‘ராஜபார்வை’ படத்தின் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. கடந்த 60 ஆண்டுகளாக புகழை எனக்கு போதுமான அளவு கொடுத்து இருக்கிறீர்கள். இனிமேல் தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசி னார்.
No comments:
Post a Comment