FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, November 9, 2018

மோசடி விதிகளை எரிப்போம்: மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கம் எச்சரிக்கை

09.11.2018
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பிறப்பித்த மோசடி விதிகளை மாற்றி அமைக்காவிட்டால், டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை துக்க நாளாக அனுசரித்து அந்த மோசடி விதிகளை எரிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பினர்,

"ஐ.நா. உரிமை உடன்படுக்கையை உண்மையாக்குவதற்கு, 2016 மாற்றுத்திறனாளிக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை உருவாக்குவதில் தமிழக அரசு பல திருத்தங்களை செய்துள்ளது.

அச்சட்டத்தை உண்மையாக்காத வண்ணம் அதில் பல விதிகளை மாற்றுத்திறனாளிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இயற்றியுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மோசடியாக தான் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் கருதுகிறது.
இதனை உடனடியாக திருத்தம் செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரக்கூடிய சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறும் வண்ணமாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசாணை 151-ன் படி இரண்டு ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுடைய ஆணையர் என்பவர் யார் கட்டுப்பாட்டின் கீழும் வராமல் ஒரு சுதந்திரம் பெற்ற அமைப்பாக, ஒரு நீதியரசருக்கு உடைய தன்மைகளோடு இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

இதை மாற்றி இத்துறையின் தலைவரும், பிரச்னை குறித்து விசாரிக்கும் ஆணையரும் ஒருவரே என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அப்படி நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் குறைந்தபட்சம் பத்தாயிரம் மாற்றுத் திறனாளிகளை சென்னையில் ஒன்று சேர்த்து இந்த மோசடி விதிகளை எரிப்போம்" என்று எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment