FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, November 5, 2018

சென்னையில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த கவர்னர்

05, 2018 04:00 AM
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். 51 திருமண ஜோடிகளையும் தனித்தனியாக அட்சதை தூவி வாழ்த்தினார்.
சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையர் ப.மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில், ஸ்ரீ கீதாபவன் நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல், அறங்காவலர் சிவக்குமார் கோயங்கா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பா.சிம்மச்சந்திரன், செயலாளர் த.பொன்னுசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 111 மாற்றுத்திறனாளி ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவ சோதனை மற்றும் பல்வேறு கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதில் 53 திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2 ஜோடிகள் நேற்றைய திருமண விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

திருமண ஜோடிகளுக்கு கீதாபவன் அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் 2 கிராம் தங்கத் தாலி, வெள்ளி மெட்டி, முகூர்த்த பட்டு வேட்டி, சேலை, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாய், தலையணை, போர்வை உள்பட 51 வகை பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:- உலக அளவில் 100 கோடிக்கு அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது 6 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாநில அளவில் இது 1.63 சதவீதமும், தேசிய அளவில் 4.4 சதவீதமும் ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக தமிழக அரசு 1993-ல் தனி இயக்குனரகத்தை தொடங்கியதுடன், அவர்களுக்கு என தனி கொள்கை திட்டத்தை 1994-ல் அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்த மாநிலமாக கடந்த 2013-14-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

பிறரின் நலனை கருத்தில் கொண்டு வாழ்வதே மனித தன்மையாகும். சுயநலத்தோடு வாழ்பவர்களால் அவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆனால், சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் பிறருக்கு உதவி செய்ய முன் வந்தால் உலகமே சொர்க்கமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment