29.11.2018, சென்னை: தனியார் நிறுவனம் தயாரித்த குறும்படத்திற்கு, சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனம், 'வித்தியாசமான மொழி' என்ற தலைப்பில், குறும்படம் ஒன்றை தயாரித்தது.இந்த படத்தின், கதை கருவை, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான இயக்குனர், லதா கிருஷ்ணா, எழுதி இயக்கினார்.இப்படம், எம்.ஜி.ஆர்., இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர், தங்கள் வாழ்வில் முன்னேறுவதை பற்றி, விரிவாக எடுத்துரைக்கிறது.இது, 'கேன்ஸ் கார்ப்பரேட்' ஊடக விருதுகள் போட்டியில் இடம் பெற்றது. இதில், சர்வதேச அளவில், 2,000 குறும்படங்கள் இடம் பெற்றன.அதில், இரண்டாவது விருதான, 'சில்வர் டால்பின்' விருதை, இக்குறும்படம் தட்டிச் சென்றது. லண்டனைச் சேர்ந்த தாமஸ் பால் மார்ட்டின் என்பவர் இயக்கிய, 'எஸ்கேப் ரோபோ' எனும் திரைப்படத்திற்கு, 'கோல்டு டால்பின்' விருது வழங்கப்பட்டது.லதா கிருஷ்ணா, பிரபல தொலைக்காட்சி இயக்குனர் மட்டுமின்றி, பாரம்பரிய நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் தான் இயக்கிய, 'இறைவன் ஆடும்போது' எனும், 'டிவி' தொடருக்கும், 'சாவித்திரி' எனும் குறும்படத்திற்கும், சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment