FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, November 20, 2018

மாற்றுத்திறனாளி என்று ஒதுங்காது பதக்கங்களை வேட்டையாடும் பேட்மின்டன் ஜெர்லின் அனிகா!

இறகுப்பந்தில் உலகளவில் சிறகை விரிக்கும் ஜெர்லின் - சாதனையால் பேசுகிறார் !

ஆசிய பசிபிக் சர்வதேச பேட் மின்டன் போட்டியில் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 'வேர்ல்ட் ஜூனியர் சாம்பியன்' மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல தீவிர பயிற்சி எடுத்துவரும் இவர் அரசு உதவியை எதிர்பார்த்திருக்கிறார்.

"என் மகளை எதிர்த்து என்னால் ஜெயிக்க முடியாது. அதனால், நான் பேட்மின்டன் விளையாடுவதில்லை" என்று பேச ஆரம்பித்தார் மாணவி ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன். ”ஜெர்லினுக்குச் சின்ன வயதிலிருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. அவள் பிறந்து, சில வருடத்திற்குப் பிறகுதான், இது எங்களுக்குத் தெரிந்தது. ஆறாம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில்தான் படித்தாள். அங்குதான் உதடு அசைவு, சைகைகள் பற்றி கற்றுக்கொண்டாள். 7-ம் வகுப்பில் சிறப்பு பள்ளியிலிருந்து மாற்றப்பட்டு வழக்கமான பள்ளியில் சேர்த்தோம். இப்போது 10-வது படித்துக்கிறாள். ஆறு வருசமாக பேட்மின்டன் பயிற்சி எடுத்துவருகிறாள். பேட்மின்டன் கற்றுக்கொள்ள ஆரம்பித்து 9 மாதம் ஆகியிருக்கும்போதே போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறாள். அவளது சின்னச் சின்னத் தோல்விகளுக்குப் பிறகு, பெரும் வெற்றிகள் அடைந்துவருகிறாள். மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெற்றிகளைப் பெற்ற ஜெர்லின், தற்போது சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கிவிட்டாள். 2017-ஆம் ஆண்டு, துருக்கியில் நடைபெற்ற வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரின், பேட்மின்டன் போட்டியில் ஜெர்லின் விளையாடினாள். அந்தத் தொடரில் உலகளவில் 5-ம் இடத்தைப் பிடித்தாள். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில், இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்தார். தற்போது வரையும் ஜெர்லின் சிறப்புப் பிரிவில் முதல் இடத்தில் உள்ளார். காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டி மலேசியாவில் கடந்த சமீபத்தில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய அணி சார்பாக 12 வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து ஜெர்லின் அனிகா கலந்துகொண்டார். ஜூனியர் சிங்கிள் மற்றும் டபுள்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பெண்களுக்கான டபுள்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கமும் மொத்தம் 3 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தால், கண்டிப்பாக என் மகள் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பாள்" என்கிறார் நம்பிக்கையுடன்.

ஜெர்லின் அனிகாவின் பயிற்சியாளர் சரவணன், ஜெர்லினோட அப்பா, கிரிக்கெட் பிளேயர் அவர் பேட்மின்டன் விளையாடமாட்டாரு ஆனா, அவரோட ஃப்ரெண்ட்ஸைப் பார்க்க பேட்மின்டன் கோர்ட்டுக்கு வருவார். அப்போ, அவர் பொண்னு ஜெர்லினையும் கூட கூட்டிவருவார். ஜெர்லின் இங்க நடக்குற மேட்சைப் பாத்துட்டே இருப்பாங்க. ஒருநாள் அவளோட அப்பா, 'நீயும் விளையாடிறியா?''னு கேட்டதற்கு ஆர்வத்தோட தலையாட்டுனாங்க. அப்போதான் ஜெர்லினோட வெற்றிக்கு விதை விதைக்கப்பட்டது. கொஞ்ச கொஞ்சமா பேட்மின்டன் கத்துகிட்டாங்க ஜெர்லின். ஆரம்பத்திலேயே நல்லா விளையாட ஆரம்பித்தாங்க ஆனா, மேட்சோட பாய்ண்ட்ஸைக் கணிக்க முடியல. எப்போ, எப்படி விளையாடணும், தான் எத்தனை புள்ளி, தனக்கு எதிரா விளையாடுறவங்க எத்தனை புள்ளி எனத் தெரியாம விளையாடிட்டு இருந்தாங்க. அதனால, பல நேரங்கள்ல தோல்விதான் கிடைச்சுது. நல்லா விளையாட தெரிந்தும் ஜெர்லினால ஜெயிக்க முடியலையேனு ஒருநாள் முழுவதும் யோசிச்சேன் அப்போதான் ஒரு சின்ன ஐடியா பண்ணி, ஒரு சிறப்பு போர்டு உருவாக்கி அவங்களுக்குப் புரியும்படி சொல்லிக்கொடுத்தேன். பாயிண்ட எப்படி கால்குலேட் செய்யணும், பந்தை எப்படி லாபகமா ஆடணும்னு எளிமையாச் சொல்லிக்கொடுத்தேன். அவங்களும் கவனமாக் கத்துகிட்டாங்க. .மாநில அளவில பதக்கங்களைத் தட்டிக்கொண்டு, இப்ப சர்வதேச அளவில் இறகு பந்து விளையாட்டில் உயர உயர பறக்கிறார். சிறப்புப் பிரிவில் இப்ப, இந்திய அளவில் நம்பர் 1 பேட்மின்டன் பிளேயரா வளர்ந்திருக்கிறார் ஜெர்லின். அடுத்தாண்டு, ஜூன் மாதத்தில் வேல்ட் ஜூனியர் சாம்பியன் போட்டியிலும், ஹாங்காங்கில் ஏசியா பசிபிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். ஜெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் எனத் தீவிர முயற்சி எடுத்துவருகிறார். தமிழக அரசு, ஜெர்லினுக்கு உதவி அளித்து, அவரின் திறமையை ஊக்கப்படுத்த வேண்டும்" என்கிறார்.

No comments:

Post a Comment