10.11.2018
ஆசிய பசிபிக் சர்வதேச பேட்மின்டன் போட்டியில் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மூன்று பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் .
ஜெர்லின் அனிகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி காது கேளாமை மற்றும் வாய் பேச முடியாத குறைபாடு உடையவர் . இவர் பேட்மின்டன் போட்டிகளின் பொதுப்பிரிவில் பங்கேற்று பல பரிசுகளை வென்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். தொடர்ந்து பேட்மின்டன் போட்டியில் ஜொலித்த ஜெர்லின் அனிகா, தற்போது ஆசிய பசிபிக் இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றுள்ளார். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டி மலேசியாவில் கடந்த சமீபத்தில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய அணி சார்பாக 12 வீரர், வீராங்களைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து ஜெர்லின் அனிகா கலந்துகொண்டார். ஜூனியர் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் , பெண்களுக்கான டபுள்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கமும் என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, மாணவி ஜெர்லின் அனிகாவை தமிழ்நாடு காதுகேளாத விளையாட்டு சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் சரவணன், ரஞ்சித் பராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment