FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, September 9, 2018

சிறுமி பாலியல் வன்கொடுமை: 17பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை, செப்.6: அயனாவரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார்.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் மிகவும் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்த சம்பவம் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை மாதம் அம்பலத்துக்கு வந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்பரேட்டராக வேலை செய்துவந்த 66 வயதான ரவிகுமார் என்பவர்தான், முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. இதனையடுத்து, ரவிகுமாரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அதே குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றுபவர்கள், தண்ணீர் கேன் போடுபவர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட 17 காமக்கொடூரர்களையும் கைது செய்த போலீசார், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்பேரில், அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் 17 பேரும் ஒரு வருடத்திற்கு ஜாமின் பெற முடியாது என்றும், சிறைவாசம் அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment