தூத்துக்குடி 2018 செப் 28 ;
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலம் தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி சார் ஆட்சியர் பிரசாந்த், தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சைகை மொழி மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி இன்று (28.9.2018) சார் ஆட்சியர் பிரசாந்த்,தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில், நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் திலகவதி மற்றும் திருமதி.சுபா ஆகியோர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் எவ்வாறு உரையாடுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்கள். குறிப்பாக, வாக்காளர் தொடர்பாக விவரங்கள் எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பதும், மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழியில் தேர்தல் தொடர்பான விவரங்கள் தெரிவிப்பது தொடர்பாக எடுத்துக் கூறினார்கள். மேலும், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் போன்ற விவரங்கள் குறித்து சைகை மொழியில் பயிற்சி அளித்தார்கள்.
இப்பயிற்சியில் சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தில்லைபாண்டி (திருச்செந்தூர்), தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment