FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Thursday, September 27, 2018

குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி?

26.09.2018
நம்‌ புலன் உறுப்புகளில் மிக முக்கியமானது ,செவி. செவித்திறன் மூலம்தான் குழந்தைகள், உலகத்துடன் இணைகிறார்கள். பேசவும் கற்றுக் கொள்கிறார்கள். செவித்திறன், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 46 கோடியே 6 லட்சம் பேரில் மூன்று கோடியே நான்கு லட்சம் பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

``செவித்திறன்தான், குழந்தைகளின் பேச்சுத்திறனுக்கும் மொழித்திறனுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அதன்படி செவித்திறனற்ற அல்லது செவித்திறன் பாதித்த குழந்தைகள் மொழித் திறன் மற்றும் பேச்சுத்திறனில் பின்தங்குகிறார்கள். எவ்வளவு சிறுவயதில் செவித்திறன் பாதிப்பு கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை மேற்கொண்டு குழந்தைகளின் வளர்ச்சியைச் சீராக்கலாம். கை, கால் பாதிப்புகளை சுலபமாகக் கண்டறிந்துவிடலாம். ஆனால் செவித்திறன் குறைபாட்டை பெரும்பாலான பெற்றோர் கண்டறிய தவறுகின்றனர்'' என்கிறார் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனசேகர். செவித்திறன் குறைபாடு எந்தப் பருவத்தில் உண்டாகிறது, அதைச் சரிசெய்யாவிட்டால் எத்தகைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்பது பற்றி அவர் விரிவாகப் பேசினார்.

``குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன் முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது‌. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர்.

ஒரு வெளிநாட்டுக் குடும்பம், தமிழ்நாட்டில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தையின் தாய்மொழி ஆங்கிலமாகத்தானே இருக்க முடியும். ஆனால் அந்தக் குழந்தை, இயல்பாகத் தமிழ் பேசும். எப்படியென்றால், மொழித்திறன் வளர்ச்சி ஒரு குழந்தை வளரும் சூழலால் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது தமிழ் பேசும் சூழலில் பிறக்கும் குழந்தை, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் மொழியைக் கேட்டே வளரும்.

குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டிருந்தால் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் பேச்சும் மொழியும் குழந்தையின் மூளையைச் சென்றடையாது. ஆனால், மூன்று வயதான நிலையில், தங்கள் குழந்தை பேசவில்லை என்றவுடன் பெற்றோர் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவார்கள். சில வீடுகளில் உள்ள பெரியவர்கள் `இவனோட அப்பா அஞ்சு வயசுலதான் பேசுனான். இன்னும் கொஞ்ச நாள்ல பேசிருவான். இதுக்கெல்லாம் யாராவது டாக்டர்ட்ட போவாங்களா...' என்பார்கள். இப்படி வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு மருத்துவரைச் சந்திக்க நினைப்பவர்களும் மருத்துவ ஆலோசனை பெறாமல் காலதாமதம் செய்ய நேரிடுகிறது.

இவை அனைத்தையும் கடந்தே சில பெற்றோர் செவித்திறன் சார்ந்த சிகிச்சைக்காகச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் பலரும் காலங்கள் கடந்தே செல்கின்றனர். இதனால் அந்தக் குழந்தையின் மொழித்திறன் மற்றும் பேச்சுத்திறன் வளர்ச்சியில் மற்ற குழந்தைகளைவிடப் பின்தங்கி நிற்க நேரும். இதனால் பள்ளியில் சேர்வதிலும் சிக்கலை உண்டாக்கும்.

குழந்தைகள் கேட்கத் தொடங்குவது எப்போது?

கருவறையில் 20-வது வாரத்தில் இருந்தே குழந்தை கேட்கும் திறனைப் பெற்று விடுகிறது. உள்காதின்‌ செவித்திறன் சார்ந்த முக்கிய உறுப்பான காக்ளியா (Cochlea) அப்போது முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது. எனவே, பிறப்பதற்கு பல நாள்கள் முன்பிருந்தே குழந்தை, கேட்கத் தொடங்கி விடுகிறது.

செவித்திறன் சார்ந்த வளர்ச்சிப் படிநிலை:

குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.

* பொதுவாக, முதல் மூன்று மாதத்தில் 50-ல் இருந்து 60 டெசிபல் சத்தம் கேட்டு குழந்தைகள் அனிச்சையான செயலை வெளிப்படுத்துவர். அதாவது திடீர் சத்தம் கேட்டு கண்களைச் சுருக்குவது, சிமிட்டுவது அல்லது தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுவது, அழுவது என குழந்தைகளிடம் சில இயல்பான நடவடிக்கைகளைக் காண முடியும்.

* நான்கு முதல் ஒன்பது மாதங்களில் சத்தம் கேட்கும் பக்கம் குழந்தை தங்கள் தலையைத் திருப்ப முயற்சி செய்யும். நான்காவது மாதத்தில் 40-ல் இருந்து 50 டெஸிபல் சத்தத்துக்கு தலையைத் திருப்பிய குழந்தை, ஒன்பதாவது மாதத்தில், 25-35 டெசிபல் சத்தத்துக்கே தலையைத் திருப்பும்.

* 10-வது மாதம்/ஒரு வயதில் - சரியாக சத்தம் வரும் இடத்தைக் கண்டுபிடித்து அந்தப் பக்கமாகத் தலையைத் திருப்புவார்கள். மிகச்சிறிய சத்தத்தையும் எளிதில் கண்டறிவார்கள்.

குழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்னைகள்
ஓடிடிஸ் மீடியா (Ottitis media):

குழந்தைகளுக்குப் பொதுவாக ஏற்படும் தொற்று ஓடிடிஸ் மீடியா. இது பெரும்பாலும் யூஸ்டாசியன் டியூப் (Eustachian tube malfunction) செயல் இழப்பதால் ஏற்படுகிறது. நடுக்காதையும் உள்மூக்கின் மேல்பகுதியையும் இணைக்கும் குழல்தான் யூஸ்டாசியன் டியூப். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளில் இந்த யூஸ்டாசியன் டியூப் அமைந்திருக்கும் நிலை காரணமாகக் குழந்தைகளில் ஓடிடிஸ் மீடியா அதிகம் ஏற்படுகிறது எனலாம்.

குழந்தைகளுக்கு இந்தக் குழாய் செங்குத்தாக இருப்பதால் தொற்று எளிதாகப் பரவி நடுக்காது பகுதிக்குப் பரவக்கூடும். இதனால் தண்ணீரோ அல்லது திரவமோ நடுக்காதில் சேர வாய்ப்பு உள்ளது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். குழந்தை வளர்ச்சியின் காரணமாக கிடைமட்ட நிலைக்கு மாறுவதால், தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

* கண்டக்டிவ் ஹியரிங் லாஸ் (Conductive hearing loss): ஒலியானது வெளியே இருந்து உள் காதுக்குச் செல்லும் பாதையில் ஏற்படும் தடையை `கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்' என்பார்கள். எடுத்துக்காட்டாக அந்நியப் பொருள்கள் பாதையை அடைப்பது (Foreign wax) மற்றும் அழுக்கு சேர்வது (Ear wax).

* சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ் (Sensori -neural hearingloss): காக்ளியா அல்லது உள்காதிலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பில் ஏற்படும் பாதிப்பே, ,`சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ்' ஆகும். காக்ளியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாக வரும் செவித்திறன் குறைபாடு, இந்த வகையைச் சார்ந்ததாகும்.

சிகிச்சை முறை

* காதில் தொற்று ஏற்பட்டால், செவித்திறன் பரிசோதனை வல்லுநர் மூலம் மட்டுமே செவித்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர் செவித்திறன் குறைபாட்டின் தன்மைக்கேற்ப காதொலிக் கருவிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு இலவசமாகவே காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

*காக்ளியர் இம்ப்ளான்ட்


காக்லியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாகப் பிறவிக்கேள்விக் குறைபாடு ஏற்படக்கூடும் .குழந்தைகள் பேச்சுத்திறனிலும் மொழித் திறனிலும் பின்தங்கிக் காணப்படுவார்கள். இந்நிலையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை (உள்காது நரம்பியல்) மூலம் கேட்கும் திறனை முழுமையாகப் பெற முடியும்.

No comments:

Post a Comment