FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, September 13, 2018

சென்னை சிறுமி வன்புணர்வு வழக்கில் 17 பேருக்கும் மரண தண்டனை?

13.09.2018 CHENNAI:
சென்னை அயனாவரத்தில் 11 வயது காது கேளாத சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 17 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட (போக்சோ) பிரிவுகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

போக்சோ சட்டப்பிரிவை தவிர்த்து, இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 376 ஏபி, மற்றும் 376 டிபி ஆகியற்றின் கீழும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகள் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அதிகபட்சம் மரண தண்டனை வழங்க வகை செய்கிறது.

கத்துவா சிறுமி வன்புணர்வு சம்பவத்தை தொடர்ந்து இந்த புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நெஞ்சைப் பதறவைக்கும் சென்னை சிறுமி வன்புணர்வு சம்பத்தில் 17 பேரும் கடந்த ஜூலை 15-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அயனாவரத்தில் சிறுமி வசித்த உள்ள அபார்ட்மென்டின் லிஃப்ட்மேன், பாதுகாவலர்கள், ப்ளம்பர்கள், எலக்ட்ரீஷியன் மற்றும் பராமரிப்பு பணியாளர்களால் 7 மாத காலமாக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி தனது சகோதரியிடம் சொன்ன பின்னர், பெற்றோர் அளித்த புகாரின்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசாரின் தகவலின்படி மயக்க ஊசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட பானங்கள் உள்ளிட்டவற்றை அளித்து சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு செய்து வந்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 17 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment