FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, September 27, 2018

அயனாவரம் காதுகேளாத சிறுமி பலாத்கார வழக்கு 6 பேர் குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து மனு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

26.09.2018 சென்னை: சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியை 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 பேரை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக கடந்த வாரம் 300 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், 17 பேரில் சுரேஷ், சுகுமாறன் உள்ளிட்ட 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 6 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment