11.09.2018, மதுரை;மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவில் செவித்திறன் குறைந்த 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் 80 பேருக்கு அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 'காது உள் நுண் துளை கருவி (காது நத்தை கருவி) பொருத்தி சாதனை படைத்தனர்.துறைத் தலைவர் டாக்டர் தினகரன் கூறுகையில், ''இத்திட்டம் 2016 ஜன.,23 ல் அமலானது. இத்திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 80 பேருக்கு காது உள் நுண் துளை கருவி பொருத்தப்பட்டது. அவர்களுக்கு செவித்திறன் முழுமையாக கிடைத்துள்ளது. இன்னும் 20 பேருக்கு கருவி பொருத்தப்பட உள்ளது'' என்றார். டாக்டர்கள் ராஜாகணேஷ், சிவசுப்பிரமணியன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment