02.09.2018 கோவை:ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில், பத்து லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம், வானவில் என்ற பெயரில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கடந்தாண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, ஆரம்பகட்ட பயிற்சி மையம், அனைத்து வட்டாரங்களிலும் துவங்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில் செயல்படும் மையத்தில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின், குறைபாடுகள் கண்டறியப்பட்டு, துவக்க நிலையில் கிசிச்சை அளிக்கப்படுகிறது.கோயமுத்துார் சாய் சிட்டி ரோட்டரி கிளப், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இம்மையத்தை அதிநவீன வசதிகள் அடங்கிய மையமாக மாற்றியுள்ளது. தேவையான பயிற்சி உபகரணங்களுடன், சுவர்பூச்சு, வண்ண ஓவியங்கள், கழிவறைகள், காத்திருப்பு அறை, படிப்பகம் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இம்மையத்தின் திறப்பு விழா, இன்று காலை நடக்கிறது. இம்மையத்தில், 15 குழந்தைகள் அடிப்படை பயிற்சி பெறுவதாக, பிசியோதெரபிஸ்ட் மதனகோபால் தெரிவித்தார்.
No comments:
Post a Comment