திருச்சி, செப்.26:
திருச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் உடலியக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1,000, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3,000ம், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.4,000, இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு ரூ.6,000ம், முதுகலை பட்டம் ரூ.7,000ம் என கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பார்வையற்றோருக்கு கல்வி உதவித்தொகையுடன் வாசிப்பாளர் உதவித்தொகையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.3,000ம், இளங்கலை பட்டம் ரூ.5000ம் மற்றும் முதுகலை பட்டம் ரூ.6,000ம் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் திருச்சி கன்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பபடிவம் பெற்று, கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும் விவரங்களுக்கு 0431- 2412590 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment