சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லாமல் பயன்பெற சலுகை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என மாற்றியமைத்து கூடுதலாக பல சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது. திட்டத்தை மாற்றி அமைக்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனை மாற்றி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும். வருமான உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் மாற்றுத் திறனாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.
No comments:
Post a Comment