FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, June 21, 2013

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

நீச்சல் வீரர் டெரன்ஸ் பார்கின்
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்ரிக்கா சார்பில் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 200 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் டெரன்ஸ் பார்கின். போட்டியில் வெற்றி பெறுவதும் பதக்கங்கள் பெறுவதும் சாதாரண நிகழ்வுகள்தான். ஆனால் டெரன்ஸ் பார்கினைப் பொறுத்தவரை என்ன ஆச்சரியம் தெரியுமா? இவருக்குக் காது கேட்காது.

காது கேட்காத ஒரு விளையாட்டு வீரர் எப்படி ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்? இதுதான் இவருடைய தனிச் சிறப்பு!


டெரன்ஸ் பார்கின் ஆப்ரிக்காவில் மூன்று நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்தவர்.


ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற "ஷார்ட் கோர்ஸ் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்' போட்டியில் கந்து கொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.


தன்னுடைய குறைபாடு, தன்னுடைய திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டத் தடையாக இருக்கக்கூடாது என்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்று வருபவர் இவர்.


தான் எந்த விதத்திலும் சாதாரணமாகக் காது கேட்கும் தன்மையுள்ள இதர விளையாட்டு வீரர்களுக்குத் தாழ்ந்தவன் இல்லை, அவர்களுக்குச் சமமானவன்தான் என்னும் கருத்தை உடையவர்.


ஒவ்வொரு போட்டியின் போதும், தான் இதற்குமுன் நடந்த போட்டியில் செய்ததை விடச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதி படைத்தவர் டெரன்ஸ் பார்கின். இந்த மன உறுதியும் விடாமுயற்சியும்தான் இவர் பல போட்டிகளில் வெற்றி பெற்று பல பரிசுகளை வெல்லக் காரணமாக இருந்தன.


1980-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் பிறந்த இவர் தன்னுடைய 14-வது வயதில்தான் நீச்சல் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார்.


தனது வாழ்வும் எதிர்காலமும் நீச்சல் போட்டியில்தான் என்ற உறுதியுடன் கடுமையாக நீண்ட நேரப் பயிற்சிகளை மேற்கொண்டார். இவரது முயற்சி வீண்போகவில்லை. வெற்றிகள் அவரை வந்து சேர்ந்து மேலும் உற்சாகப்படுத்தின. நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது, போட்டி ஆரம்பிக்க ஒலிக்கும் அடையாள சப்தத்தைத் தன் உடம்பில் பொருத்தியிருக்கும் ஒரு மின்னணு கருவி மூலமாக, கேமராவில் ஃப்ளாஷ் லைட் ஒளி வருவது போல தனது கண்களுக்குள் ஏற்படச் செய்து அதன் மூலம் போட்டியின் ஆரம்ப நேரத்தை உணர்ந்து, நீச்சல் குளத்துக்குள் பாயத் தொடங்குவார். அப்புறம் என்ன? இடைவிடாத வேகம்தான்...


மன உறுதியும் நம்பிக்கையும் இருந்தால் எந்தக் குறைபாட்டையும் மாற்றியமைத்து வாழ்வில் சாதனைகள் படைக்கலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு டெரன்ஸ் பார்கின்.

No comments:

Post a Comment