FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, June 26, 2013

விஸ்வரூப விஷ்ணுராம்


சிறிய கஷ்டம் வந்தால்கூட நம்மில் பல பேர் சோர்ந்து துவண்டு விடுவோம். ஆதரவாக சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்காதா என்று ஏங்குவோம். ஆனால், காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவன் இந்தக் குறைகளைச் சொல்லி அழுது கொண்டிருக்காமல், தேசிய அளவில் சாதனை புரிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணுராம் தான் அந்த சாதனை மாணவன்.அம்மா வாய் பேச முடியாதவர். மூளை நோயால் பாதிக்கப்பட்டவர். அப்பா கூலித் தொழிலாளி. சாதிப்பதற்கான முகாந்திரமே இல்லாமல் முடங்கிக் கிடந்த விஷ்ணுராம், அப்பாவின் தீவிர பயிற்சியினாலும் இடைவிடாத ஊக்கத்தினாலும் கூடைப்பந்து வீரராக உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்ட விஷ்ணுராம், இந்த விளையாட்டுத் துறையின் சிறந்த ஆட்டக்காரருக்கான (மேன் ஆப் தி சீரீஸ்) விருது பெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.தமது சாதனை குறித்து விஷ்ணுராம் சைகையிலேயே நம்மிடம் பேசினார்.அம்மா அப்பாவின் ஊக்கம் தான் என்னுடைய இந்த சாதனைக்குக் காரணம். நான் ஒருபோதும் மாற்றுத் திறனாளி மாணவன் என்று சிந்தித்தது இல்லை. இது என்னுடைய சாதனையின் தொடக்கம்தான். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்து, என் பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பேன்," பெற்றோரைக் கட்டிக் கொள்கிறார் விஷ்ணு ராம்.விஷ்ணுராமிடமிருந்து நாம் இன்னும் நிறைய விளங்கிக் கொள்ள வேண்டும்.

- ஆதலையூர் சூரியகுமார்

No comments:

Post a Comment