19.08.2016
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை புள்ளிவிவரத்துடன் கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத்துறை, இருதயவியல், நரம்பியல், சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவை தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
உடலியல் துறை தற்போது டெல்டா மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் எலும்பு முறிவு, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மூளை வளா்ச்சி, நாள்பட்ட வலி போன்றவற்றிற்கு சிகிச்சை பெறலாம். இதில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைப்பிரிவு திங்கள் வியாழன் இரு நாட்களில் காலை 10-12 மணி வரை.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, இருதயவியல் மருத்துவப்பிரிவு திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, நரம்பியல் மருத்துவப்பிரிவு செவ்வாய், வௌ்ளி ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை செயல்படவுள்ளது.
மேலும் புனா்வாழ்வு மருத்துவத்துறை டெல்டா மாவட்டத்தில் இங்கு மட்டுமே இருப்பதால் டெல்டா மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் புள்ளி விவரங்களை கணக்கெடுத்து அவர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்குத் தேவையான முறையில் தேவையான வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அவசர சிகிச்சை தேவைப்படுபவா்கள் 9445551108 என்ற அவசர சிகிச்சை வழிகாட்டுதல் குழு எண்ணை தொடா்பு கொண்டால் தகுந்த முன்னேற்பாட்டுடன் தகுந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றார் நிர்மல்ராஜ்.
- NIKKEERAN
No comments:
Post a Comment