FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, August 19, 2016

Posted Date : 11:42 (13/08/2016) 'உதவித் தொகை வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்!' - மாற்றுத் திறனாளிகளின் ஆவேசம்

14.08.2016
விழுப்புரம்: உதவித் தொகை பெறுவதற்கு லஞ்சம் கேட்பதாக, அரசு அதிகாரிகளைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இருநூறுக்கும் அதிகமான மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்திருப்பது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போராட்டம் குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக் கூறும்போது, ''கடந்த ஆறு மாதமாக மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உதவிகளைக் கேட்டு, ஆறுமுறை போராட்டங்கள் நடத்தி மனு அளித்திருக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட கடைசி அறிவிப்பு, ' 40% ஊனம் இருப்பவர்களுக்கு விதிகள் அனைத்தையும் தளர்த்தி உதவித் தொகை வழங்க வேண்டும்' என்பதுதான். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த இரண்டே நாட்களில் அரசு உத்தரவையும் கொண்டு வந்துவிட்டார்கள். பிப்ரவரி 22-ம் தேதி போடப்பட்ட அரசாணைப்படி எங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அதே மாதம் 29-ம் தேதியன்று 37 பேர், உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதேபோல 265 மாற்றுத் திறனாளிகளும் ஆறுமுறை விண்ணப்ப படிவத்தையும் மனுவையும் அளித்திருக்கிறார்கள்.

ஆனால், அனைத்து கிராமங்களில் இருக்கும் இந்த வருவாய்துறை அலுவலர்கள், ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.8,000 லஞ்சமாக அளித்தால்தான் உங்களுக்கு உதவித் தொகை கிடைக்கும் என்று சொல்லி கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதிலும் குறிப்பாக விக்கிரவாண்டி தாசில்தார், 'நீங்க எங்கு வேண்டுமானாலும் போய்ச் செல்லுங்கள். பணம் கொடுக்காமல் உங்கள் ஃபைல் மூவ் ஆகாது' என்று பகிரங்கமாகவே சொல்லி விரட்டியடிக்கிறார்.



எந்தஒரு மனுவைப் பெற்றுக் கொண்டாலும் உடனடியாகவோ அல்லது அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள்ளாகவோ அதற்கான ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள்ளாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி நடவடிக்க எடுக்க இயலாத பட்சத்தில் அவர்களிடம் கூடுதல் காலக்கெடு வாங்க வேண்டும் என்றும் அரசு விதி தெளிவாகக் கூறுகின்றது. ஆனால், லஞ்சம் தராத ஒரே காரணத்திற்காக அந்த உத்தரவுகளைப் பின்பற்றாமல் ஆறு மாதங்களாக 265 பேருக்கும் உதவித் தொகை வழங்காமல் அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள். இதில் கொடுத்த 265 விண்ணப்பத்தில் 150 விண்ணப்பங்களை அவர்கள் தொலைத்துவிட்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை நடத்தப் போகிறோம் என்று சென்ற வாரமே நாங்கள் அறிவித்தபோது அனைத்துத் தாசில்தார்களும் எங்களுக்கு போன் செய்து, மீண்டும் விண்ணப்பங்களை வாங்கினார்கள். இது ஒருபுறம் என்றால், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளை சேர்ப்பதில்லை. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக இரண்டு கழிப்பறைகள் கட்டி, இன்னும் திறக்காமலேயே அப்படியே வைத்திருக்கிறார்கள். பணிதள பொறுப்பாளர் என்ற பதவிக்கு மாற்றுத் திறனாளிகளுக்குத்தான் வழங்க வேண்டும் என்று அரசாணை கூறுகின்றது.

‘டைம் மோஷன் ஸ்டடி” என்று சொல்லும் அரசு உத்தரவில் எந்தெந்த வேலைகளை எப்படியான உடல் ஊனமுற்றவர்களுக்கு அளிக்கலாம் என்று தெளிவாக வகைப்படுத்தி இருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் பலமுறை நாங்கள் தெளிவாக மாவட்ட நிர்வாகத்திடம் ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறியும், இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்குக் காரணம், தாசில்தார்களுக்கு இருக்கும் லஞ்ச வேட்கைதான்.



கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தில், எங்கள் சகோதரர்களில் ஒருவரான குப்புசாமி என்பவரை பலி கொடுத்துவிட்டுத்தான் இந்த அரசாணையையே நாங்கள் பெற்றோம். ஆனால் அதற்குப் பிறகு சிறு துரும்பைக்கூட இவர்கள் எங்களுக்காக கிள்ளிப்போடவில்லை. இன்னும் எத்தனை உயிர்களை இவர்கள் காவு வாங்கப் போகிறார்களோ?, இவர்களைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்துவிட்டதால் அனைத்து தாசில்தார்களும் எங்கள் மீது வழக்கு போடப்போகிறோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்" என்றார்.

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. சுருளிராஜா, வட்டாட்சியர் வெற்றிவேல், கோட்டாட்சியர் ஜீனத்பானு உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக நேரில் வந்து பேச்சுவார்தை நடத்தியும், 'கலெக்டர் வரும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் 'என மாற்றுத்திறனாளிகள் பிடிவாதமாக அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டதால், நேற்று நள்ளிரவு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

" எங்களை விடுதலை செய்தாலும் நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம். எங்களுக்கான ஆணையை அவர்கள் கொடுக்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. இதற்காக இங்கேயே எங்கள் உயிரை விடக்கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று ஆவேசமாக கூறுகிறார்கள் மாற்றுத் திறனாளிகள்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமியிடம் கேட்டபோது, ''அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்தான் 200 பேருக்கு மேல் விண்ணப்பம் கொடுத்துவிட்டு, உடனே கொடுக்கும்படி கேட்டார்கள். உடனே எப்படி கொடுக்க முடியும். ஆனாலும் நான், அதிகாரிகளை விரட்டி 189 பேருக்கு விண்ணப்பங்கள் தயார் செய்து வைத்துள்ளோம்,.

ஆனால் அவர்கள் அதை ஏற்காமல், தவறான குற்றச்சாட்டை முன்வைத்து, தேவையில்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் வேதனையும், வலியும் எங்களுக்கும் தெரியும். அவர்களின் குற்றச்சாட்டில் எந்தவித ஆதாரமும் இல்லை. தற்போது, தயார் நிலையில் உள்ள 189 பேரின் விண்ணப்பங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று கொடுக்க ஏற்பாடு செய்தாகிவிட்டது" என்றார்.

- ஜெ.முருகன்

No comments:

Post a Comment