FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, August 19, 2016

சமஉரிமை மறுக்கப்படுவதை முதல்வர் அறிவாரா?' -மாற்றுத் திறனாளிகளின் ஆதங்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை வழங்குகிறோம்' என்ற பெயரில் புறக்கணிக்கும் வேலைகளே தொடர்ந்து நடக்கின்றன. ' அம்மா திட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்காமல், பயனாளிகளைக் குறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்' என வேதனைப்படுகின்றனர் மாற்றுத் திறனாளிகள்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 10-ம் தேதி, சமூகநலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததும், மாற்றுத் திறனாளிகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.' இதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்தோ, பணியிடங்களை நிரப்புவது குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை' என வேதனைப்படுகின்றனர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சங்கத்தின் பொதுச் மாநில செயலாளர் நம்புராஜன்,

" அரசு கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 13 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஆனால், மாநிலம் முழுவதும் 45 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், 'மாற்றுத்திறனாளிகள் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், நாட்டிலேயே மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்புக் கவனம் எடுத்து வருவது தமிழக அரசுதான் என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். நன்றாகப் படித்து முடித்தும், வேலையில்லாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. அரசிடம் வேலை கேட்டுத் தொடர்ந்து போராடி வருகின்றனர். சட்டப்படியான அரசு வேலைவாய்ப்புகளைக் கண்டறியாமல், அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதைப்பற்றி எல்லாம் மானியக் கோரிக்கை விவாதத்தில் சாதகமான அறிக்கை எதுவும் வைக்கப்படவில்லை.

மேலும், 'நாற்பது சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவித்தார்' முதல்வர். கடந்த பிப்ரவரி 22 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரையில் ஒரு நபருக்குக் கூட புதிய உத்தரவின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஏற்கெனவே மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்று வந்த பல்லாயிரம் பேருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிட்டது.

மாவட்டம்தோறும் மூன்றாயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 'அம்மா திட்டம் மூலம் உதவித்தொகை தருவோம்' என எழுத்துப்பூர்வமான உத்தரவு வழங்கப்பட்டவர்களுக்கும் உதவி வந்து சேரவில்லை. மனநலம் பாதித்தவர்களை மாற்றுத் திறனாளிகள் கணக்கிலேயே அரசு சேர்க்கவில்லை. இவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது அரசின் கொள்கை இல்லை என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது. இது மாற்றுத் திறனாளிகளின் சட்டத்தையே மறுப்பதாகும். சட்டமன்றக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படாமல், வெறும் அறிவிப்புகளாகவே இருப்பதை முதலமைச்சர் அறிவாரா?" எனக் கொந்தளித்தார்.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment