04.08.2016, மதுரை
ரயில்வே அமைச்சகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளி பயணிகள் இணையம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவற்கு வசதியாக புகைப்படத்துடன் கூடிய சிறப்பு அடையாள அட்டையை, ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. மதுரை கோட்டத்தில் இதுவரை 4,718 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத் திறனாளி பயணிகள், ரயில்வே சலுகைச் சான்றிதழ், முகவரிச் சான்று, பிறப்புச் சான்றுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் செல்லிடப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு, முதுநிலை வர்த்தக மேலாளர், தெற்கு ரயில்வே, மதுரை-625016 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
விண்ணப்பித்து ஒரு மாதமாகியும் அடையாள அட்டை பெறாத நபர்களும், மேற்கண்ட முகவரியில் முதுநிலை வர்த்தக மேலாளரைத் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment