FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, August 7, 2016

தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு

07.08.2016, மதுரை: தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான 'சிடி'க்கள் தொகுப்பை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள் அதிகம் பயன்படுகின்றன. ஆனால் பேச்சு வழக்கில் இந்த எழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்பு மருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ் எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும் மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்பணியில் எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல (லாங்குவேஜ் செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப் பில் சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்பட உள்ளன.

தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது: எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு கற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழி ரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன் எழுத்துக்களை எளிதில் புரிய வைத்து பிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ள பின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்ப உத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.

No comments:

Post a Comment