FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, September 10, 2016

புதிய அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது

07.09.2016, பழனி, புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

புதிய அரசாணை

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதில் அரசு கடைபிடிக்கும் நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி ஒருவர் இறந்து போனார்.

இதன் எதிரொலியாக, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், 40 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அரசாணை பிறப்பித்து 6 மாதம் ஆகியும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்

இந்தநிலையில் புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை அங்கு வந்தனர். பின்னர் மாநில செயலாளர் நம்புராஜன் தலைமையில் சமூகநலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

235 பேர் கைது

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் நம்புராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் பகத்சிங், நகர தலைவர் மாலதி, ஒன்றிய தலைவர் சதீஸ்குமார் உள்பட 235 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 140 பேர் பெண்கள் ஆவர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment