FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, September 16, 2016

DEAF மாற்றுத்திறனாளி மனைவியை அரிவாள் மனையால் வெட்டிய கணவர் கைது



15.09.2016, வாழப்பாடி: வாழப்பாடி அருகே, சாப்பாடு போடாததால், மாற்றுத்திறனாளி மனைவியை, அரிவாள்மனையால் வெட்டிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி, காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம், 43. இவரது மனைவி தேவி, 35; வாய் பேச முடியாதவர்.நேற்று முன்தினம், வீட்டிற்கு வந்த ஆறுமுகம், மனைவியிடம் சாப்பாடு போடும்படி கூறியுள்ளார். கணவர் கூப்பிட்டது தெரியாமல், பாக்கு வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த ஆறுமுகம், அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து, தேவியை வெட்டினார். கழுத்து, தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்த தேவியை, அருகில் இருந்தவர்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாழப்பாடி போலீசார், வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

No comments:

Post a Comment