28.09.2016
திருப்பூர் : சர்வதேச காது கேளாதோர் தினம், திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
வஞ்சிபாளையம் அருகே கோதபாளையத்தில் உள்ள காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர்களால் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதில், காது கேளாதோர் படித்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்; பெண்களுக்கு, 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்வது தவறு; பிறவியிலேயே காது கேட்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு, காதில் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளியிலும், இனிப்பு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment