FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, September 16, 2016

மோடி பிறந்த நாளை சாதனை நாளாக மாற்ற திட்டம்

15.09.2016, புதுடில்லி: பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அன்று, மாற்றுத்திறனாளிகள் 11 ஆயிரம் பேருக்கு உதவி வழங்கி, கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி என்ற இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடி அளவுக்கு மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. அங்கு ஆயிரம் பார்வையற்றவர்கள் விளக்குகளை ஏற்றி வைத்து சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 346 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது சாதனை இருந்து வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தி்ல 500 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. இதனை முறியடித்து ஆயிரம் பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட உள்ளது. மேலும் 11 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கி சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வாரணாசியில், 10,200 பேருக்கு உதவி வழங்கி, அது குறித்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவில் கின்னஸ் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதால், சாதனையாக ஏற்கப்படவில்லை. எனவே தற்போது அதுபோன்று குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக , மாவட்ட கலெக்டருடன் இணைந்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரி செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment