08.09.2016, நாமக்கல்: 'மாவட்டத்திலுள்ள, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை பெறுவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், அரசின் நலத்திட்ட உதவி மற்றும் உதவி உபகரணம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்க உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும், 14ம் தேதி, ராசிபுரம்; 15ம் தேதி, நாமகிரிப்பேட்டை; 16ம் தேதி, வெண்ணந்தூர்; 17ம் தேதி, சேந்தமங்கலம்; 20ம் தேதி, எருமப்பட்டி; 21ம் தேதி, மோகனூர்; 22ம் தேதி, நாமக்கல்; 23ம் தேதி, ப.வேலூர்; 24ம் தேதி, கபிலர்மலை; 27ம் தேதி, திருச்செங்கோடு; 28ம் தேதி, மல்லசமுத்திரம்; 29ம் தேதி, பள்ளிபாளையம்; 30ம் தேதி, புதுச்சத்திரம்; அக்., 1ம் தேதி, எலச்சிபாளையம், 3ம் தேதி கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில், மருத்துவ முகாம்கள் நடக்கவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment