22.09.2016, பென்னாகரம்: மாதாந்திர உதவித்தொகை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்று கூறி, மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று, பென்னாகரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபப்பை ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில், 56 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு, கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நேற்று தங்களின் அடையாள அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த பென்னாகரம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முறையான அனுமதி பெற வேண்டும் என கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கரூரான் கூறியதாவது: உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து, ஆறு மாதத்திற்கும் மேலாகியும் அதிகாரிகள் அதை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உதவித்தொகை வழங்க எங்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிகளான எங்கள் மீது, அதிகாரிகள் இரக்கம் காட்டுவதில்லை. இதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment