28.08.2016, மானாமதுரை: மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் கைவண்ணத்தில் பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டின் புதுவரவாக கடல்கன்னி விநாயகர் உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதரையில் மாற்றுத் திறனாளிகளான பாண்டியராஜன், தங்கமணி ஆகியோர் சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக இவர்கள் தயாரிக்கும் பிள்ளையார் சிலைகளுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கையில்லாத பாண்டியராஜன் ஒற்றை கை கொண்டு, சிலைகளை கலைநுட்பத்துடன் வடிவமைக்கிறார்.
சென்னையில் திருவொற்றியூர், எர்ணாவூர், மணலி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள், தொழிற்பேட்டையை போல் தயாராகி வருகின்றன. 3 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றது. இந்த ஆண்டின் புதுவரவாக கடல்கன்னி விநாயகர் தயாராகி வருகிறது என்று சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால், மரவள்ளிகிழங்கு மாவு போன்ற ரசாயனம் கலக்காத மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment