05.09.2016, பவானி: பவானியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த, மாற்றுத்திறனாளிகள் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்தனர். பவானி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் தலைமையில், சுயம்வரம் நடந்தது. இதில், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஜோடிகளை தேர்வு செய்தனர். இதில், முதலாவதாக பவானி, தாளவாடி பகுதியைச் சேர்ந்த ராஜீ, முதியனூரைச் சேர்ந்த சில்பகுமாரி ஜோடி தேர்வானது. இதேபோல், பலரும் தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர். தேர்வான ஜோடிகளுக்கு வரும், 14ம் தேதியன்று சென்னையில், கீதா பவன் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஜோடிக்கும் தலா, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு கிராம் தங்கம், இரண்டு மாதத்திற்கான மளிகை செலவு மற்றும், 52 வகையான சீர்வரிசையுடன் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment