30.11.2016
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்து விளக்கம் கேட்டு டிசம்பர் 3-ஆம் தேதி புதுதில்லியில் பேரணி நடத்தப் போவதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மசோதா குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் அளித்தது. இதில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர். அதோடு, வரவிருக்கும் குளிர் கால கூட்டத்தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க கோரி வருகின்றனர். இதற்காக, கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்து வலியுறுத்தும் இயக்கம், ஆளுநரிடம் பேரணியாகச் சென்று மனு அளிக்கும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 20 இடங்களில் டிசம்பர் 2-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து டிசம்பர் 3-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக, பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை சென்னையிலிருந்து புதுதில்லிக்கு 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment