FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, December 7, 2016

மாற்றுத்திறனாளிகள் மன உறுதிக்கு வாழ்த்துகள் - ட்விட்டரில் பிரதமர் மோடி

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons) கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளின் பிரச்னைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும். இயலாமையை இல்லாமை ஆக்குவது என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களிடம் மறைந்து கிடக்கும் தனித் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அவர்களிடத்தில் நம்பிக்கை ஊட்ட வேண்டும். மாற்றுத் திறனாளி மறுவாழ்வுப் பணியில் ஈடுபடுபவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பல நாடுகளில் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை மேம்பட சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிந்துள்ளார். அதில், "மாற்றுத் திறன்கொண்ட சகோதரர்கள், சகோதரிகளின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளும், சமத்துவமும் முழுமையாக நாடு தழுவிய அளவில் கிடைத்திட முழு வீச்சில் செயல்படுவோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment