17.12.2016, திருநெல்வேலி பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளி கலையரங்கில் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்கள் சார்பில் புனித அன்னை தெரசா நினைவு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் மு.கருணாகரன்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.
மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மேலும் இது போன்ற தொண்டுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைத்து அவையங்களும் நல்ல நிலையில் உள்ள திருநங்கைகளும் குடும்பங்களில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேற்றப்படுகின்றனர். முதியோர்களும் ஆதரவற்ற நிலையில் உள்ளதையும் காணமுடிகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக அரசு பல உதவிகளைச் செய்தாலும், இது போன்ற சமூக அமைப்புகளும் உதவிகள், சேவைகள் செய்து வருகின்றனர்.
நல்ல குடும்பங்களை உருவாக்கி மகிழ்சியுடன் வாழும் போது தான் நல்ல சமுதாயம் உருவாகும். குடும்பங்கள் தன்னிரைவு பெற்று சுய சார்புடன் திகழும.; நமது மாவட்டத்தில் 28 திருநங்கைகளுக்கு நரசிங்க நல்லூர் பகுதியில் வீடுகள் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 9160 நபர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வரும் புனித அன்னை தெரசா நினைவு பகிர்வு விழா நண்பர்களையும் வாழ்த்துகிறேன் எனப் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.சாந்தி குளோரி எமரால்டு, பெல் மெர்ரிக் நிர்வாகி திரு.சஞ்சய்சிங், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தம்பி, புனித அன்னை தெரசா பகிர்வு விழா நண்பர்கள் குழு தலைவர் திரு.பாப்புராஜ், மற்றும் நண்பர்கள், மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment