FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, December 19, 2016

முகம் நூறு: கனவே ஓவியமாக

11.12.2016
சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் ஓவியக் கண்காட்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு, ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுவேதா. கண்களை விரித்து, கைகளை அசைத்து சுவேதா கூறுவதை மொழிப் பெயர்த்துக்கொண்டிருந்தார் அவரது அப்பா கணேசன். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான சுவேதா Surrealism எனப்படும் ஆழ்மன வெளிப்பாடுகளை ஓவியமாக வடித்திருந்தார்.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சுவேதா, தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். மகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கணேசன். “இரண்டரை வயதாக இருக்கும்போது மாம்பழம், பந்து போன்றவற்றை வரைந்து காட்டுவேன். அதையும் திருத்தி அழகாக மாற்றுவார் சுவேதா. பென்சில் ஓவியங்களில் அவரின் கலை ஆர்வத்தைப் பார்த்து, ஓவியம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தேன். விரைவாகவே வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் வகை ஓவியங்கள் என்று வரையத் தொடங்கினார். பிறகு எழும்பூரில் அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்தார். பள்ளி இறுதியிலிருந்து தன்னுடைய செலவுகளுக்கு அவரே டியூஷன் எடுத்து, சம்பாதித்துக்கொள்கிறார். தன்னம்பிக்கை மிக்கவர்” என்று பெருமிதமாகச் சொன்னார்.


சுவேதாவுக்கு 2010-ம் ஆண்டில் சிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான ஜனாதிபதி விருதை, அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கியிருக்கிறார். அத்துடன் யுவகலா பாரதி உள்ளிட்ட பல விருதுகள் இவர் வசமாகியிருக்கின்றன. நம் வாயசைவுகளை வைத்துப் புரிந்துகொண்டு பதிலளிக்கத் தொடங்குகிறார் சுவேதா. “குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுக்கும்போது அவர்களின் படைப்பாற்றல் மேம்படும். இதைத்தான் என்னிடம் பயிற்சி பெறும் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அதனால் இதைத்தான் வரைய வேண்டும் என்று கூற மாட்டேன். அவர்கள் விரும்பியவற்றை வரையுமாறு வலியுறுத்துவேன். அதில் திருத்தம் செய்வேன். அத்துடன் காலத்துக்கேற்ற பயிற்சியையும் வழங்கி வருகிறேன்” என்பவர், 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

“எனது எண்ணங்களை வெளிப்படுத்த ஓவியத்தைக் கையிலெடுத்தேன். கனவில் தோன்றுவதை அப்படியே கோடுகளாக வரைகிறேன். கலை, குழந்தைகளின் சிரிப்பு, தியானம் இவையெல்லாம்தான் நமக்கு ஆறுதல் தருபவை. என்னுடைய ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு, அவர்களின் உணர்வுகளும் அதில் பிரதிபலித்திருக்கும்” என்று கூறும் சுவேதா, சென்னை லலித்கலா அகாடமி, பெங்களூரு, உத்தரகாண்ட், டில்லி உள்பட பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சிகளை நடத்திவருகிறார். பிரபல ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, விஸ்வம், அல்போன்சா உள்ளிட்டோரின் பாராட்டுகளைத் தான் பெற்ற பரிசுகளில் உயர்வானதாக நினைக்கிறார்.

“ஓவியங்கள் குறித்த புரிதலும், கலை மீதான ஆர்வமும் இங்கு குறைவாகத்தான் இருக்கின்றன. இன்னும் நிறைய ஓவியக் கண்காட்சிகள் நடத்தி, மாணவர்களிடமும் மக்களிடமும் ஓவியக் கலையின் பல பரிமாணங்களைக் கொண்டுசேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான திறனை வெளிப்படுத்தும் படைப்புவெளி எளிதாக்கப்பட வேண்டும். இப்போது இணையத்தில் என் ஓவியங்களை விற்பனை செய்துவருகிறேன்” என்கிறார் சுவேதா.

No comments:

Post a Comment