FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 7, 2016

காதுகேளாத வாய்பேசாத பெண் கேட்கும் நீதி..... காதை பொத்திக் கொள்ளும் அரசு!

05.12.2016
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! ஆனால், அதிகார வர்க்கத்தினால், சீரழிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிச் சிறுமி ஒருவர் வருடக் கணக்காக நீதி கிடைக்காமல் மனம் வெதும்பிக் கிடக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்குகிறது.

வாய்பேசாத - காதுகேளாத சிறுமி !

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடகரை கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத - வாய்பேசாத சிறுமி அவள். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாற்றுத்திறன் சிறுமியை கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வீசிவிட்டுச் சென்றது.

சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்களுடனும் சாலையோரத்தில் துடித்துக் கிடந்த மகளை அருகிலுள்ள வீரபத்ரா மருத்துவமனையில் சேர்ப்பதற்காகத் தூக்கிச் சென்றார் அவரது தந்தை. ஆனால், 'காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், நாங்கள் சிகிச்சைக்கு சேர்க்கமாட்டோம்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது போலீசாரோ அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்ய மறுப்பு !


இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் தலையிட்டு போராட்டம் நடத்திய பிறகே வழக்கைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியை சீரழித்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் மகன்கள் என்பதால் விசாரணையை அப்படியே கிடப்பில் போட்டது போலீஸ். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டசிறுமியின் தந்தை வீரபத்ரா, தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் உறுதுணையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோன்று வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதுமான நிவாரணமோ அல்லது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையோ கிடைக்கவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

அரசும் சமூகமும் நீதிகிடைக்காமல் இருக்கக் காரணம் ! 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலமாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், ''இதுவரையிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கவில்லை'' என்று கவலை தெரிவிக்கிறார் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்பிராஜன்.

''சி.பி.சி.ஐ.டி ஒரு முறை மட்டுமே வந்து விசாரணை நடத்திவிட்டுச் சென்றார்கள். அதோடு இந்த வழக்கு நிற்கிறது. கோடகரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர் மகனும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்தச் சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்ன கொடுமைகள் இழைத்தாலும் கேட்க நாதியில்லை என்பதே இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படாமல் இருக்கக் காரணம். நாங்களும் பலமுறை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டுவிட்டோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை'' என்று அலுத்துக்கொண்டார் நம்பிராஜன்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள் தற்போது வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் இந்த சமூகத்தின் சாடலால் மனம் வெதும்பி தனிமையில் தத்தளிக்கிறாள்.

எப்போது அவளுக்கு நீதி கிடைக்கும்?

No comments:

Post a Comment