FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, December 7, 2016

“இன்னும் எத்தனை நாள் எங்களை அலைக்கழிப்பார்கள்...!”-குமுறும் மாற்றுத் திறனாளிகள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கிடப்பில் போடப்படுவதில் முதலிடம் பெறுவது மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளே என்பது தமிழக மாற்றுத் திறனாளிகளின் வலுவான புகார். பார்வையற்ற நிலையிலும், கைகால்கள் குறைபாடு உள்ள நிலையிலும்,வாய் பேச இயலாத நிலையிலும் உயிர் வாழும் அவர்களின் வாழ்க்கை, மிகுந்த போராட்டங்கள் நிறைந்தது.

பிறவியில் நிகழும் சோகம் என்றாலும், அதை மேலும் கூடுதல் ஆக்குவது அவர்களைச் சுற்றியுள்ளவர்களே என்கிறபோது மாற்றுத்திறனாளிகளின் சோகம் மொழிக்குள் அடங்காத ஒன்றாக மாறிவிடுகிறது. ஆனாலும் தம்மிடம் இருக்கும் உடல் குறைபாட்டைப் பொருட்டாகக் கருதாமல் பல துறைகளில் சாதனை செய்யும் அவர்களின் மனத்துணிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்க்கையை எதிர்கொண்டுவரும் தமிழக மாற்றுத்திறனாளிகள் நிலைமை குறித்தும் அதை மாற்ற அரசு மேற்கொள்ளவேண்டிய உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் 'டிசம்பர் 3' இயக்க தலைவர் தீபக் என்பவரிடம் கேட்டோம்.

அவர் கூறுகையில்,"மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தின் இறுதியாக, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ், மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாக அறிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளித்திருந்தார் அந்தக் குழு கடந்த 5 வருடமாக நடைமுறைக்கு வரவில்லை. அந்தக் குழுதான் கொள்கை முடிவு எடுக்கும் உயர் அதிகாரம் பெற்றது. ஆனால் அது அமைக்கப்படவில்லை, குழுவின் கூட்டமும் நடக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் போராட முனையும்போது, அவர்களைக் காவல்துறையினர் எப்படிக் கையாள வேண்டும்? என்பதை அந்தக் குழுதான் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் தெளிவாகக் கூறியிருந்தது. இது நடைமுறையில் இல்லை. எனவே எங்களின் அவலமும் தொடர்கிறது.

அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் திட்டமும் தொங்கலில் நிற்கிறது. வேலையற்ற ஊனமுற்றவர்கள் யார் என்ற வரையறையை தமிழக அரசு இன்னமும் முடிவெடுக்காததால் பென்ஷன் ஏராளமான மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த சிக்கல் குறித்து அரசிடம் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மனு அளித்து விட்டோம். அதனை அரசு நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. பென்ஷன் கேட்பதால் எங்கள் மீது அரசுக்குக் கழிவிரக்கப் பார்வைதான் இருக்கிறது. எங்களை ஐயோ பாவம் என்றுதான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அணுகுகிறார்கள்.இது மிகுந்த வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

எங்களைச் சமத்துவமாகப் பார்த்து, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் எப்படி பங்கெடுக்க வைக்கலாம் என்பதை ஆய்ந்தறிந்து, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கவேண்டும்.திறன் வாய்ந்த கற்று அறிந்த நபர்கள் ஏராளமானோர் எங்களில் இருக்கின்றனர்.இதனை அரசு முழு கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் எங்கள் துறையில் கமிஷனர் கூட மாற்றுத்திறனாளி இல்லை.

அரசுப்பணியிடங்களில் வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு என்பது காற்றில் கட்டப்பட்ட அரண்மனைதான். அது நடைமுறையில் இல்லவே இல்லை. இதில் நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரைகளையும் அரசு பின்பற்றவில்லை. இந்த இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்கும் தலைமைச் செயலாளர் குழுவில் மாற்றுத் திறனாளிகள் இல்லை. எங்கள் பிரச்னை என்னவென்று தெரிந்துகொள்ள அரசுக்கு ஆவலில்லை.

மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 'காலிப்பர்' கண்டுபிடிப்பை இன்னமும் மத்திய-மாநில அரசுகள் செயலில் கொண்டு வரவில்லை.தமிழ்நாட்டில் அந்த செயற்கைக் கால் வழங்கும் திட்டம் என்பது பெயரளவுக்குக் கூட இல்லை. அவருக்கு மரியாதை கொடுக்க நினைத்தால் அரசுக்கு இதைவிட வேறு என்ன இருந்துவிடப் போகிறது" என்றார் கொந்தளிப்போடு.

மாறட்டும் மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வைகள்!

No comments:

Post a Comment