FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, December 19, 2016

உள்ளபடியே உரிமைகள் தருமா மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம்?

18.12.2016
சமூகத்தின் பார்வையில் வலிமையற்று இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். உடல் வலியோடும், மன வலியோடும் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அவர்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இப்போது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மசோதா (Rights of Persons With Disabilities (RPWD) Bill, 2014) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குடியரசு தலைவர் ஒப்புதலுக்குப் பின்னர் சட்டமாக்கப்படும்.

சட்டத்துக்கான அவசியம்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா சாசனம் 2006-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்டது. இதில் 160 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் கையெழுத்திட்டதன் காரணமாக இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் தொடர்பாக புதிய மசோதா ஒன்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

யாரெல்லாம் மாற்றுத் திறனாளிகள்?

மாற்றுத் திறனாளிகள் என்றால், கண்தெரியாதவர், காது கேளாதவர் உள்ளிட்ட சில குறைபாடுகளை கொண்டவர்கள் மட்டும்தான் என்ற பார்வை நம் சமூகத்தில் இருந்து வந்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கென 1995-ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 7 விதமான குறைபாடு உடையவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள் என்று பட்டியலிடப்பட்டது. இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி 21 விதமான குறைகளை உடையவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி என்பதை பன்முகத்தன்மையுடன் மதிப்பீடு செய்து முடிவு செய்ய வேண்டும். 21 விதமான மாற்றுத் திறனாளிகளில் உடல் குறைபாடுகள் மட்டுமின்றி சில மனநலக்குறைபாடுகள் உள்ளவர்களும் மாற்றுத் திறனாளிகள்தான் என்று கூறப்பட்டுள்ளது. ஆட்டிசம் குறைபாடு உடையவர்கள், பெருமூளை வாதம் (cerebral palsy), தசை வலுவிழப்பு (muscular dystrophy), தலசீமியா, கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள், பார்கின்சன் நோய்(parkinson’s disease) ஆகிய கோளாறுகள் உள்ளவர்களும் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் வருகின்றனர். ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

பாரபட்சம் கூடாது

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராகப் பாரபட்சமாக செயல்படக் கூடாது. அப்படி பாரபட்சமாகச் செயல்படுபவர்களுக்கு தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன், 10 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சிரமம் இல்லாமல் வந்து செல்லும் வகையில் அனைத்து அரசு கட்டடங்களிலும் 2 ஆண்டுகளுக்குள் சாய்வு தளப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். போதுமான கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துகளில் மாற்றுத்திறனாளிகளின் பயணத்துக்கும் ஏற்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு


இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது இப்போது 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் எப்போதும் தங்களுடன் மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழை வைத்துக் கொள்ளத் தேவையில்லை. மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது.

இட ஒதுக்கீடு போதாது


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தைச் சேர்ந்த தீபக்கிடம் பேசினோம். "ஒரு சர்வதேச அழுத்தம் காரணமாக இந்தச் சட்டத்தை இந்தியா கொண்டு வந்து இருக்கிறது. ஆனால், ஐ.நா உடன்படிக்கையின்படி சட்டம் கொண்டு வரப்படவில்லை. ஐ.நா உடன்படிக்கையில், மாற்றுத் திறனாளிகளை அணுகும் விஷயத்தில் மன கட்டமைப்பு, கட்டட கட்டமைப்பில் மாற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
21 விதமான மாற்றுத் திறனாளிகளை சட்டத்தில் பட்டியலிட்டுள்ளனர். ஆனால், இந்தப் பட்டியலில் உள்ளவை தவிர மேலும் சில ஊனங்கள் இருக்கின்றன. லைசோசோமல் ஸ்டோரேஜ் (lysosomal storage disease)என்ற குறைபாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த குறைபாட்டுடன் 130 பேர் இருக்கின்றனர். இது இந்தப் பட்டியலில் வரவில்லை. காக்கா வலிப்பு இந்தப் பட்டியலில் இல்லை. இது போன்ற மேலும் சில குறைபாடுகள் சேர்க்கப்படவில்லை.

7 விதமான மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் இருந்தபோது 3 சதவிகிதம் ஒதுக்கீடு கொடுத்தனர். அதையே ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் 21 விதமான மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்று கூறி உள்ளனர். நாங்கள் 6 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கேட்டோம். எங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒரு ஆணையர் தமிழகத்தில் இல்லை. மாற்றுத் திறனாளிகளின் ஓட்டு மட்டும் வேண்டும் என்கின்றனர். ஆனால், எங்களுக்கான உரிமைகள் இன்னும் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. இது பழைய மொந்தையில் புதிய கள்தான்" என்றார்.

 

No comments:

Post a Comment