FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, January 30, 2015

+2 மாணவர்களே... ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிக்க விருப்பமா? NEST தேர்வுக்குத் தயாராகுங்க!



புவனேஸ்வரில் உள்ள, National Institute of Science and Education and Research (NISER), மும்பையில் உள்ள Centre for Excellence in Basic Sciences (CBS) போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் +2 முடித்த மாணவர்களைத் தேர்வு செய்து 5ஆண்டு ஒருங்கிணைந்த M.Sc படிப்பை வழங்குகின்றன.

இப்படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக NEST (National Entrance Screening Test) என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இத்தேர்வு பற்றி விரிவாக விளக்குகிறார், கல்வியாளரும் ‘ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்நனருமான ஆர்.ராஜராஜன்.

‘‘NISER என்பது, இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் இயங்கும் சுய அதிகாரம் உள்ள நிறுவனம். இந்நிறுவனம் ஒருங்கிணைந்த உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் M.Sc., Ph.D போன்ற படிப்புகளை வழங்குகிறது.


CBS என்பது நடுவண் அரசின் அணு ஆற்றல் துறையும், மும்பை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் கல்வி நிறுவனம். இந்நிறுவனம் அடிப்படை அறிவியல் துறைகளுக்கான ஒருங்கிணைந்த M.Sc படிப்புகளையும், இவை தொடர்பான ஆய்வுப் படிப்புகளையும் தருகிறது. இந்த இரு நிறுவனங்களுமே உறைவிட கல்வி நிறுவனங்களாகும்.

இந்த நிறுவனங்களில் M.Sc பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசின் ‘இன்ஸ்பையர்’ திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ரூ.5000, திட்ட அறிக்கைக்காக ரூ.20,000 வழங்கப்படும். இறுதி செமஸ்டர் வரை மிகச்சிறந்த மதிப்பெண்களை பெறுபவர்கள், ‘பாபா அட்டாமிக் எனர்ஜி பயிற்சிப் பள்ளி’யில் நேரடி சேர்க்கைக்கான வாய்ப்பினைப் பெறுவார்கள்.

இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ழிணிஷிஜி நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படும். யாரெல்லாம் இந்தத் தேர்வை எழுதலாம்?

+2வில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் பிரிவுகளை எடுத்துப் படித்து, மொத்தம் 60% மதிப்பெண்களை எடுத்த பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறைந்தது 55% எடுத்திருக்க வேண்டும். கிரேடு முறையிலான மதிப்பீட்டினை மாணவர்கள் பெற்றிருப்பின், இதற்கு சமமான விழுக்காட்டிற்கான சான்றிதழை, சம்பந்தப்பட்ட துறையிலிருந்து மாணவர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ற்போது +2 படித்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி:
பொது மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 1995ம் ஆண்டு அல்லது அதற்குப் பின் பிறந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆண்டு வயதுச் சலுகை உண்டு.

இந்த படிப்புக்கு ழிமிஷிணிஸி நிறுவனத்தில் 102 இடங்களும், சிஙிஷி நிறுவனத்தில் 47 இடங்களும் உண்டு. அரசு விதிப்படி இடஒதுக்கீடுகளும் உண்டு.

NEST நுழைவுத்தேர்வு, சென்னை, மதுரை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 52 இடங்களில் நடத்தப்படும். நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

தேர்வு எந்த அடிப்படையில் நடக்கும்?
சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் நடக்கும் இந்தத் தேர்வில் மொத்தம் 5 பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிற்கும் 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். பிரிவு I பொதுப்பிரிவாகும். அனைத்து மாணவர்களும் கட்டாயமாக விடையளிக்க வேண்டிய பகுதி இது. இப்பிரிவில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது.

இப்பிரிவிற்கு குறிப்பிட்ட பாடத்திட்டம் தரப்படவில்லை என்றாலும், வானியல், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல், கணினியியல் பாடங்களில் பொது அறிவு பயிற்சி வேண்டும். அறிவியல் பாடங்களுக்கான காம்ப்ரிஹென்ஷன் (Comprehension) பகுதியும் இடம்பெறும். கணிதத்தைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்கள் அமையும்.

II, III, IV, V பிரிவுகளைப் பொறுத்தவரை உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதப் பாடங்களை உள்ளடக்கியிருக்கும். பிரிவு இரண்டு முதல் ஐந்து வரையிலான பிரிவுகளுக்கு தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். பொதுவாக காம்ப்ரிஹென்ஷன், அனாலிடிகல் திறமை இவற்றை சோதிக்கும் வகையில் இத்தேர்வு அமையும். சில வினாக்களுக்கு, விடையில் ஒன்று அல்லது அதற்கு மேலான சரியான விடைகள் இருக்கலாம். அனைத்தும் சரியான விடையுள்ள எண்ணை மாணவர்கள் தேர்வு செய்தால் அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.

பழைய வினாத்தாள்களை www.nestexam.in இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?
www.nestexam.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 700 ரூபாய். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 350 ரூபாய்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 7.4.2015.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் 15.4.2015 அன்று முதல் இணையதளத்தில் கிடைக்கும்.

தேர்வு 20.5.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

முடிவுகள் 19.6.2015 அன்று வெளிவரும்.

மேலும் விவரங்களுக்கு

The Chief Coordinator, NEST 2015,
NISER, Institute of Physics Campus,
Sachivalaya Marg, Sainik School (PO),
Bhubaneswar 751 005, Odisha



No comments:

Post a Comment