FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, January 11, 2015

மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி

10.01.2015, சென்னை மயிலாப்பூரில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்புகளால் இணைந்து நடத்தப்​பட்டது.
​​
​ இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் ​நந்தனம் கலைக் ​கல்லூரி முதல்வர் பிரபு ஆகியோர் கலந்து ​கொண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை பாராட்டினர்.

தமிழகத்தின் முதல் பார்வையற்ற கல்லூரி முதல்வர் பிரபு (நந்தனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர) பேசுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அனுதாபம் இல்லை. இந்த சமூகத்தின் ஊக்கம் மட்டுமே" என்று கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் பிற மாற்றுத் திறனாளிகளையும் ஊக்குவித்து அவர்களையும் சாதனையாளர்களாக ஆக்க பெரிதும் துணை புரியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீரர் ரமேஷ் அவர்களுடன் கிரிகெட், பண்பலை தொகுப்பாளர், ஜூடோ, பள்ளிக் கல்வி, சிறுவர் பாராளுமன்றம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்து வரும் பிற மாற்றுத் திறனாளிகளும் அங்கீகரிக்கப்பட்டனர்.

​சாதனையாளர்கள்​ பட்டியல்​: இரமேஷ் - கிரிக்கெட், வெங்கடேஷ் - கிரிக்கெட், குமார் - பண்பலை தொகுப்பாளார் (FM), மனோகரன் - ஜூடோ, மோனிஷா - ஜூடோ, விஜய சாந்தி - ஜூடோ, பாப்பாத்தி - ஜூடோ, விஜய் - பள்ளி கல்வி, அருள்ராஜ் - பள்ளி கல்வி, சுவர்ண லட்சுமி - சிறுவர் பாராளுமன்றம், சாய் கிருஷ்ணா விக்னேஷ் - பள்ளி கல்வி, சிவபிரகாஷ் - பள்ளி கல்வி ​

No comments:

Post a Comment