06.01.2015, சேலம், :
சேலம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் செவித்திறன் குறைபாடுள்ள இளம் சிறாருக்கான நவீன பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 6வயதுக்கு உட்பட்ட காது கேளாத இளம் சிறாருக்கான பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் உட்பட 15மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் நவீன பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறியதாவது:

6வயதுக்கு உட்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள சிறாருக்காக நவீன பரிசோதனை மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலகத்தில் ரூ.5.10லட்சம் மதிப்பீட்டில் இந்த மையம் அமையவுள்ளது. செவிஒலி வெளிக்கொணர் பரிசோதனை, மூளை தண்டுவடம் மறுபதில் பரிசோதனைகள் இங்கு செய்யப்படும். அதோடு பேசுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
காதுக்கு வெளியில் உள்ள குறைபாடுகளை கண்டறிய ஏற்கனவே கருவிகள் உள்ளன. இந்த மையத்தில் உட்புற காதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நவீன சிகிச்சைகள் அளிக்கப்படும். முதற்கட்டமாக 6வயதுக்கு உட்பட்ட சுமார் 50பேருக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment